150 ரூபாய் கூட இல்ல.. சரிகமப செட்டில் மனைவியுடன் ரகளை செய்த சந்தோஷ் நாராயணன்
“இத மனைவிக்கு தினமும் செய்வேன்.. ” என சரிகமப செட்டில் சந்தோஷ் நாராயணன் பேசிய காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சரிகமப நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சந்தோஷ் நாராயணன் அவருடைய மனைவியுடன் கலந்து கொள்கிறார்.
தமிழ் சினிமாவில் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் சந்தோஷ் நாராயணன். இவர், சமீபத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் வெளியான பொட்டல மிட்டாய் பாடலுக்கு இசையமைத்து பாடியிருப்பார்.
இந்த பாடல் திரைப்படத்தை விட பட்டிதொட்டியெங்கும் பெரியளவில் ஹிட்டானது. சினிமா துறையில் இவ்வளவு பிரபலமாக இருக்கும் சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி இலங்கையை சார்ந்தவர். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் அலப்பறைகள்
இந்த நிலையில், சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்தோஷ் நாராயணன் மனைவி பற்றிய சில வார்த்தைகளை பகிர்ந்திருக்கிறார்.
அதில், “ நான் சினிமாவுக்குள் வராமல் இருந்திருந்தால் Tech துறையில் சாதித்து இருப்பார். கிரிக்கட் வீரர்களுக்கான குழுவொன்று அமைத்து நடைமுறைப்படுத்தவுள்ளேன். என்னுடைய மனைவிக்கு தினமும் love you கூறி விடுவேன். என்னுடைய மகள், வீட்டிலுள்ள அனைவருக்கும் கூறி விடுவேன்..” என புன்னகையுடன் மனைவியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த காணொளி பார்க்கும் பொழுது இருவரின் காதலையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது.
150 ரூபாய் கூட இல்லை..
இதற்கிடையில், மிடில் க்ளாஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சந்தோஷ் நாராயணன் அவர் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான விடயங்கள் குறித்து பேசியிருந்தார்.
அதாவது, “ ஒரு முறை எனக்கு பெங்களூரில் வேலைக்காக சென்றேன். அப்போது 5000 ரூபாய் வரை செலவானது. நான் சீடி கவரில் சில்லறை காசு சேர்த்து வைத்திருப்பேன். அந்த பணத்தை எடுத்துவிட்டால் எக்னாமிக் டிசாஸ்டர் வந்துவிட்டது என நினைத்து கொள்வேன். அந்த பணத்தை எடுத்து கொண்டு பெங்களூர் சென்றேன்.

திரும்பி வரும்போது என்னிடம் 150 ரூபாய் தான் இருந்தது. என்னால் அந்த டிவியை பெற முடியவில்லை. என்னிடம் இருந்த பணம் தொலைந்து விட்டது என பொய் கூறினேன். அவர்களே 150 பணம் போட்டார்கள். ஆனாலும் டிவி வீட்டிற்கு வரவில்லை. ஏனெனின் அதனை வாங்குவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை..” என கசப்பான அனுபவத்தை சிரித்தப்படி கூறியிருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |