சனிப்பெயர்ச்சியை தொடர்ந்து சூர்ய கிரகணம்: யாருக்கு ஆபத்து? மகிழ்ச்சியடையும் ராசிகள் இதோ
சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும், யார் யார் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி
சூரிய கிரகணம் என்பது, ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் அசுபமானவைகளாக கருதப்படுகின்றன. இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி அதிகாலை 4: 08 மணி வரை நீடிக்கும்.
இடம்பெயரும் சனி பகவான்
அதேபோன்று, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 அம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். ஆகவே சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும், யார் யார் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி நன்மையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி வெற்றியை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள்முடிவுக்கு வரும்.
அதிகமாக பிரியாணி சாப்பிட்டால் என்ன நடக்கும்? அதிர்ச்சி தகவல் இதோ
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி நாளில் கவனமுடனிருப்பது உங்களுடைய நேர்மைக்கு உரிய மதிப்பீடு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய திறமைகளை பிறருக்கு காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி நல்ல நாளாக இருக்கும். இதுவரை குழப்பமான மனநிலையில் இருப்பவர்கள் உறுதியான முடிவுகளை எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி நாளில் அமைதியாக இருப்பது நல்லது. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்து போகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சியால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கணவன்-மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. தயார் ஆதரவு பிறக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி நாள் துணிச்சலாக எதிலும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. வெளியூர் செல்வதற்கு திட்டமிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி நீண்ட நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கு நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.
தனுசு:
னுசில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி, உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததைநிறைவேறும். சமூகத்தின் மீது அக்கறை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் மேம்படும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். எந்த ஒரு முக்கிய முடிவையும் தள்ளி வைப்பது நல்லது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி நாளில் கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பழைய வாகனத்தை மாற்றி புது வாகனங்கள் வாங்குவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தடை, தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகத்திற்கு குறைவிருக்காது. கடனை தீர்கள் முயற்ச்சி செய்வீர்கள். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.