அதிகமாக பிரியாணி சாப்பிட்டால் என்ன நடக்கும்? அதிர்ச்சி தகவல் இதோ
பிரியாணியை விரும்பாதவர்களை காண்பது அரிது! அந்தளவுக்கு எல்லோருக்கும் பிடித்த உணவாக அது உள்ளது.
எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது.
உலகளவில் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இருக்கிறது என்கிறார்கள் அதன் ரசிகர்கள்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல பிரியாணியை அடிக்கடி அதிகளவு சாப்பிட்டால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிகளவில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
வயிற்று எரிச்சல்
வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று தின்னாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்று எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.
உடல்பருமன்
அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
உணவில் அதிக உப்பு சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?
சர்க்கரை அளவு
பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ் க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதய நோய் அபாயம்
பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்கள் இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
வெளிநாட்டில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்