ஏழரை சனி தாக்கம் குறைய வேண்டுமா? கண்டிப்பா இதை மட்டும் செய்திடுங்க
ஜோதிடத்தில் மெதுவாக நகரும் கிரகமாக சனி கிரகம் இருந்தாலும் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் நீடிக்கின்றார்.
சில ராசிகளில் சனி ஏழரை சனியாக மாறி பல இடையூறுகளையும் ஏற்படுத்துவார். சனிபகவானைப் பொறுத்த வரையில், ஒருவர் செய்த நல்லது மற்றும் கெட்டது ஏற்ப பலன்களை கொடுப்பவர் ஆவார்.
ஏழரை சனி தாக்கம் குறைய என்ன செய்யலாம்?
ஏழரை சனி தாக்கம் குறைய சிறந்த வழி தானம் அளித்தல் ஆகும். ஆகையால் முடிந்தவரை பிறருக்கு உதவியும் தானமும் செய்து வாருங்கள்.
நம் வீடுகளில் இருக்கும் ஆடை போன்று நமக்கு பயன்படாமல் இருக்கும் பொருட்களை ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் தானமாக அளிக்க வேண்டும்.
அன்னதானம் செய்து வர வேண்டும். நாய் போன்ற உயிரினங்களுக்கு உணவளிக்க வேண்டும். மேலும் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும்.

சனிப்பிரதோஷம் அன்று சிவபெருமானிற்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மேலும் பைரவர் வழிபாடு மற்றும் அனுமாரை வழிபாடு செய்து வர வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |