22 வயதில் தற்கொலை செய்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? பிரபல நடிகை ஓபன் டாக்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்த நடிகை மயூரி குறித்த தகவலை சங்கீதா சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை மயூரி
பாண்டியராஜனின் கும்பகோணம் கோபாலு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மயூரி. தொடர்ந்து விசில், மன்மதன், ஏய், கனா கண்டேன் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் நடித்த இவர் கடந்த 2005ம் ஆண்டு தனது 22 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை சங்கீதா மயூரியுடன் மலையாளத்தில் சமர் இன் பெத்லகேம் என்ற படத்தில் நடித்த நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்றில் மயூரி குறித்து பேசியுள்ளார்.
இவர் கூறுகையில், திரைப்படங்களில் காண்பதும், நிஜ வாழ்வில் காணப்படுவதும் வெவ்வேறானவை... வளைந்து கொடுப்பவர்களால் மட்டுமே இரண்டையும் கையாள முடியும் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |