Sandhya Raagam: ஜானகி கழுத்தில் ஏறிய தாலி! வீடியோவை வெளியிட்ட கார்த்திக்... பரபரப்பான ப்ரொமோ
சந்தியா ராகம் சீரியலில் கோவிலில் பூஜை நடைபெற்ற நிலையில், ஜானகி தனது தாலியினை காணிக்கையாக போட்டுள்ள நிலையில், ரகுராம் கையால் மீண்டும் தாலி கட்டியுள்ளார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தற்போது அக்கா தங்கைகளாக வாழ்ந்து வரும் கதையைக் கொண்டுள்ளது.
தனத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் மாயா தான் அவரைக் காப்பாற்றுகின்றார். இது ரகுராமிற்கு தெரியாமல் இதை செய்து வரும் மாயா கெட்டப்பெயர் எடுத்து வருகின்றார்.
தற்போது கார்த்திக் மீண்டும் மீண்டும் தனத்திற்கு தொந்தரவு கொடுத்துவரும் நிலையில், தற்போது ஜானகி கழுத்தில் ரகுராம் தாலிகட்டியுள்ளார்.
கோவிலில் வைத்து நடைபெறும் இந்த நிகழ்வின் போது கார்த்தி, தன்னிடம் இருந்த தனத்தின் காணொளியினை வெளியிட்டுள்ளார்.
ரகுராமிற்கு உண்மை தெரியுமா? வீடியோ வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
