சமந்தா விவாகரத்து பற்றி உடைத்த உண்மை - இப்படி ஒரு கசப்பான வாழ்க்கையா?
சமந்தாவின் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது என்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதல் முறை பேசியுள்ளார்.
நடிகை சமந்தா ஹிந்தியில் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ப்ரொமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் அவர் விவாகரத்து பற்றி பேசி இருக்கிறார்.
அதாவது, திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் போக காரணம். வாழ்க்கை K3G (கபி குஷி கபி கம்) படம் போல இருக்கும் என காட்டினார்கள்.
கேஜிஎப் போல இருந்த திருமண வாழ்க்கை
ஆனால் உண்மையில் அது கேஜிஎப் போல இருக்கிறது என சமந்தா கூறி இருக்கிறார்.
அதனால் சமந்தா அவரது திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பதை இப்படி மறைமுகமாக பேசி இருக்கிறார் எனதெரிகிறது.
காபி வித் கரண் முழு ஷோ ஒளிபரப்பானால் தான் சமந்தா மேலும் என்ன கூறி இருக்கிறார் என்பது தெரியவரும். தற்போது ப்ரோமோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.