ஒரே மாதத்தில் முடி கொட்டும் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு வேண்டுமா?.. கட்டாயம் இதை மட்டும் செய்யுங்கள்.. முழு காணொளியுடன் இதோ!
பொதுவாக பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று முடி கொட்டும் பிரச்சினை. முடி கொட்டும் போது ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும். இல்லையெனில் அதிகப்படியான முடி இழப்பு உண்டாகக்கூடும். முடி இழக்கும் போதெல்லாம் அழகு குறைகிறதே என்னும் கவலையும் கூடுதலாக மன அழுத்தமும் உண்டாகிறது.
குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடியை பற்றி கவலைப்படும் பிரச்சினை இருக்கிறது. ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் அவர்களின் முடிகள் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைந்து விடுகிறது.
இப்பதிவில் முடி கொட்டுவதற்கான காரணம் என்ன? ஏன் அதிகமாக கொட்டுகிறது தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதை பற்றியெல்லாம் இப்பதிவில் பார்போம். முடி கொட்டுவடதை காரணமே முடிக்கு தேவையான சத்துகள் தேவை ப்ரோடீன் அதிகமாக தேவை.
மேலும், புளி சார்ந்த குழம்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதால், முடி கொட்டுவது அதிகமாகிறது. அதற்கு பதிலாக எலுமிச்சை சேர்த்து கொள்ளலாம்.
பச்சைபயிறு முளைக்கட்டியதை சாப்பிட்டு வருவதால் முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வாகும். தயிர், மோர், பால் போன்ற சத்துணவு உள்ள பொருட்டகளையும், இறைச்சியில் நாட்டுக்கோழி, தரமான முட்டைகளை சாப்பிட வேண்டும். இதன்பின்னர், மட்டன் சூப், மட்டன் லிவர் போன்ற ப்ரோட்டீன் உணவுவினை எடுத்துகொள்ளலாம்.
இதையெல்லாம் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு அடைவதை தடுக்க வேண்டும். உடல் சூட்டினாலே அதிக முடி கொட்ட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் உடல் சூடு ஆவதை தடுக்கும் வழியில் எண்ணெய் தேய்த்து குளிப்பதும், குடிநீர் அதிகமாக குடிப்பதும் நல்லது. இரும்புச்சத்துக்கு பீட்ரூட், மாதுளம்பழம், பேரிச்சம்பழம், உலர் திராட்சை, அத்திப்பழம், இறைச்சியில் ஈரல், முட்டை போன்றவற்றை எடுத்துகொள்ளலாம்.
இப்படி தினம் ஒன்றை கண்டிப்பாக எடுத்துகொள்ளும் போது உடலுக்கும் சத்து சேரும். முடியும் ஆரோக்கியமாக இருக்கும். இறுதியாக முடி உதிர்வுக்கு காரணங்களை கண்டறிந்தால் போதும் தீர்வும் எளிதாக காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியின் மூலம் முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்..