விஷ்ணுகாந்த் சம்யுக்தா பிரச்சினை! பகிரங்கமாக பேசிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி
சின்னத்திரை நட்சத்திரங்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் பிரச்சினை குறித்து சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பகிரங்கமாக பேசியுள்ளார்.
சம்யுக்தா விஷ்ணுகாந்த் பிரச்சினை
பிரபல ரிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்த போது காதல் ஏற்பட்டு சுமார் ஏழு மாதங்கள் காதலித்து வந்துள்ளனர் சம்யுக்தா விஷ்ணுகாந்த்.
கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும், வெறும் 15 நாட்களில் பிரச்சினை ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்துள்ளனர்.
இருதரப்பினரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கியதோடு, மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர். மேலும் தங்களது தனிப்பட்ட பிரச்சினையை எல்லாம் மீடியாவிற்கு எடுத்துவந்து மாறி மாறி குற்றம் சாட்டினர்.
தற்போது இவர்களின் பிரச்சினை சற்று ஓய்ந்த நிலையில், இவர்களின் பிரச்சினை குறித்து சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி சரமாரியாக திட்டித் தீர்த்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி
நாட்டுப்புறப் பாடகியாக வலம் வரும் ராஜலட்சுமி, தனது கணவர் செந்தில் கணேஷன் உடன் பிரபல ரிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகினர்.
பாடல் வாய்ப்பு, சினிமா வாய்ப்பு என அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று கடகடவென முன்னேறி வரும் இவர்கள், அவ்வப்போது காணொளி வெளியிடுவது வழக்கம்.
ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் பாடலும் புஷ்பா படத்தில் சாமி... சாமி... என்ற பாடலும் இவர்களை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
சின்னத்திரை பிரபலங்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குறித்து ராஜலட்சுமி பகிரங்கமாக பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜலட்சுமி பேசுகையில், இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மீடியா வரை கொண்டு வந்தது கேவலமாக இல்லையா? தங்களுக்குள் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க விஷயத்தை எல்லாம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும்படியாக சோசியல் மீடியாவில் பேசி தன்னைத்தானே நியாயப்படுத்துவதாக நினைத்து, தங்களையே தவறாக காட்டிவிட்டனர்.
இவ்வாறு அருவருப்பாக அனைத்து விடயங்களை வெளியே கொண்டு வந்த இவர்கள் பேசாமல் அப்படியே விட்டுவிட்டு விவாகரத்து பெற்று பிரிந்திருக்கலாம்.
அவ்வாறு செய்யாமல் இவ்வாறு பக்குமில்லாமல் மாறி மாறி பேசி மற்றவர்களின் அனுதாபத்தை பெறுகின்றனர். இந்த அளவிற்கு தங்களது மனதை பலவீனமாக வைத்துக்கொள்ளக்கூடாது என்று சரமாரியாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |