வந்துவிட்டது உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் மோதிரம்... நம்பமுடியாத ஆச்சரியம்
நமது உடல்நிலையை கண்காணிப்பதற்கு ஸ்மார்ட் வாட்ஸ், செல்போன்கள் என கையில் உலாவரும் நிலையில், தற்போது மோதிரமும் வந்துவிட்டது. இதன் விபரத்தை தெரிந்து கொள்வோம்.
SAMSUNG நிறுவனம்
நாம் எவ்வளவு நேரம் உறங்குகிறோம், நமது இதய துடிப்பு எப்படி உள்ளது? இன்றைய தினம் எவ்வாறு இருந்தது என்பதை கையில் ஸ்மார்ட் வாட்ச், போன் மூலம் கணிக்கும் நமக்கு இனி கேலக்ஸி வாட்ச் வந்துவிட்டது.
இனிமேல் ஸ்மார்ட் வாட்ச், போன் இவற்றினை கையில் எடுத்துச் செல்வதற்கு சங்கடப்படும் சிலருக்கு ஸ்மார்ட் மோதிரத்தினை சாம்சங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
எலக்ட்ரானிக் நிறுவனத்தில் முன்னணியாக இருக்கும் சாம்சங் நிறுவனம், தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் பலரும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ரிங்கை பாரிஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகம் செய்துள்ளது.
கேலக்ஸி மோதிரம்
ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் பேட்டரி ஏழு நாட்கள் வரை தொய்வின் வேலை செய்வதுடன், தண்ணீர் பட்டாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த மோதிரமானது நமது இதய துடிப்பு, தூக்கத்தின் நேரம், தோல் வெப்பநிலை, ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி, பணியாற்றும் நேரம், நடக்கும் நேரம் என அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும்.
Samsung நிறுவனத்தின் அண்மைக்கால Galaxy படைப்புகளை போலவே, இந்த Galaxy Ring எனர்ஜி ஸ்கோர், உடல்நல அறிவுரைகளை வழங்கும் வெல்னஸ் டிப்ஸ் போன்ற AI அம்சங்களை உள்ளடக்கி உள்ளது.
இதயத் துடிப்பை கண்டறிவதற்காக பிரத்யேக ஃபோட்டோபிளெதிஸ்மோகிராபி என்ற சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை இந்த மோதிரத்துடன் இணைத்துக்கொண்டால், ஒரு சில சிறிய தட்டல்கள் மூலம் புகைப்படம் எடுக்கலாம், செல்போன் அலாரங்களை கூட நிறுத்த முடியும் என்று கூறுகிறது சாம்சங் நிறுவனம்.
இந்த மோதிரம் காணாமல் போனால், கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி அதன் இருப்பிடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியுமாம்.
5 முதல் 13 வரையிலாள விரல் அளவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மோதிரம் 8MP வரை மெமரியை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |