அமெரிக்கா டூரில் ஜாலியாக சுற்றும் சமாந்தா, ராஜ் நிட்மொரு - அவரே பகிர்ந்த புகைப்படங்கள்
நடிகை சமந்தா, தற்பொழுது அமெரிக்கா டூரில் சுற்றிப்பார்க்கிறார். மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் பகுதியில் எடுத்துக் கொண்ட கலர்ஃபுல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
நடிகை சமந்தா
'தி பேமிலி மேன்' வெப் சீரீஸ் மூலம் ஹிந்தி உலகையும் கவர்ந்த சமந்தா, அதன் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிட்மோரோவுடன் நெருக்கமாக இருப்பதாக வதந்திகள் பரவிவருகின்றன.
இதை உறுதிப்படுத்தும் வகையில், சமந்தாவின் அமெரிக்கா பயணத்தில் இயக்குநர் ராஜ் நிட்மோரோவும் அருகில் இருப்பது மட்டுமல்லாது, சமந்தாவுடன் தோள்களில் கை வைத்து நடக்கிறார் எனும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதன் அடிப்படையில், இவர்கள் இருவருக்கிடையிலான உறவை சமந்தா தானாகவே வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் உருவாகி வருகின்றன.
நடிகை சமந்தா, அமெரிக்கா பயணத்தின் போது எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படத்தில், இயக்குநர் ராஜ் நிட்மோறு, சமந்தாவின் தோளில் அன்பாக தனது கைகளை வைத்திருப்பதோடு, சமந்தாவும் அவரது முதுகைப் பற்றிக்கொண்டு, சிரித்தபடியே நடந்து வருவது தெளிவாக காணப்படுகிறது.
இந்த காட்சி, இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்களின் உறவு குறித்து பரவி வரும் ஊகங்களுக்கு இன்னும் வலுவூட்டும் வகையிலும் உள்ளது என இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |