ட்ரெண்டிங் சேலையில் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் சிவாங்கி! குவியும் லைக்குகள்
சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி கருப்பு நிற ட்ரெண்டிங் சேலையில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே ஆரம்பித்துவிட்டார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
தற்போது மேடை நிகழ்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் சிவாங்கி சமூக வளைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது கருப்பு நிற ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் சிவாங்கி வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |