அப்போது என் அடையாளத்தையே இழந்துவிட்டது போல் உணர்ந்தேன்... சமந்தா ஓபன் டாக்!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, தனது திரைப்பயணத்தில் பல்வேறு வெற்றிகளை சந்தித்ததுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார் தற்போது தனது கர்ப்பகாலத்தை என்ஜாய் செய்து வருகின்றார்.
குறிப்பாக, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட காலகட்டம் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததது குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் சமந்தா பகிர்ந்த விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த சமந்தா, தற்போது பான்-இந்திய அளவில் பிரபலமான நடிகையாகவும் வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வந்த அவர், தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக சமந்தா அறிவித்தார். மேலும், தாய்மையை முன்னிட்டு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி, மெட்டர்னிட்டி பிரேக் எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது கர்ப்ப காலத்தில் இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

தனது தாய்மை பயணம் குறித்து வெளிப்படையாகப் பேசிவரும் அவர், இதுவரை கர்ப்ப காலத்தில் 11 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல், தாய்மை தனது வாழ்க்கையில் புதிய தன்னம்பிக்கையையும் மன வலிமையையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

மயோசிடிஸ் குறித்து மனம் திறந்த சமந்தா
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டங்களில் ஒன்றான மயோசிடிஸ் நோய் பாதிப்பு குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. ஆனால், அந்த அனுபவம் எனக்கு மன உறுதி, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை கற்றுக்கொடுத்தது. அந்த அனுபவத்தின் காரணமாக இப்போது என் வாழ்க்கை இன்னும் மேம்பட்டுள்ளது” என சமந்தா கூறியுள்ளார்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்? என்ற கட்டத்தை தாண்டி, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ உள்ளது என்ற தெளிவை அடைய எனக்கு சிறிது காலம் ஆனது" என கூறினார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.