சமந்தா மற்றும் ராஜ் இருவரின் திருமண உடையில் இப்படியொரு சுவாரசியமா? வெளியான சீக்ரெட்
நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் ராஜ் நிதிமோர் திருமணத்தன்று அணிந்திருந்த ஆடையினைக் குறித்து சில சுவாரசிய தகவலை ஆடை வடிவமைப்பாளர் வெளியிட்டுள்ளார்.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்து, திருமணம் செய்தார். பின்பு சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அவரைப் பிரிந்தார்.
இயக்குனர் ராஜ் நிடிமோரு இயக்கிய பேமிலி மேன் என்ற வெப்சீரிஸில் சமந்தா நடித்தார். இதில் நடிக்கும் போது இருவருக்கும் நட்பு ஆரம்பமாகியது.

இவர்கள் இருவரும் வெளியிடங்களுக்கு சென்று ஒன்றாக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங் பைரவி கோவிலில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
மொத்தம் 30 விருந்தினர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தின் போது குங்குமச்சிவப்பு நிறத்தில் புடவை கட்டிருந்தார் சமந்தா. இதனை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர் பல்லவி சிங் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

திருமண ஆடையில் உள்ள ஸ்பெஷல்
ஆடை வடிவமைப்பாளரான பல்லவி சிங் சமந்தாவிற்கு தோழியாகவும், 15 ஆண்டுகள் அவருக்கு ஆடை வடிவமைத்தும் கொடுத்து வருகின்றார்.
தற்போது திருமணத்தில் அணிந்திருந்த ப்ளவுஸில் கூட கலைநயமிக்க கைவண்ணத்தை காட்டியுள்ளார். அதாவது சமந்தாவின் ஜாக்கெட் பின்னே தேவியின் உருவம் பொரிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது கண்ணையும் குறிக்கும் வகையில் வகையில் வேலைப்பாடு செய்யப்பட்டதாம்.

அவரது கணவர் ராஜ் சுத்தமான தங்கத்தைப் போன்றவர் என்பதால் ஆடையில் தங்க நிறத்தினை சேர்த்து தயாரிக்கப்பட்டதாம். குயில்டிங் நுட்பத்தினைப் பயன்படுத்தி பருத்தி மற்றும் பட்டு துணியினை பல அடுக்குகளாக இணைத்து தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் வகை உடை, கையால் நெய்யப்பட்ட பட்டு குர்தா என்றும் தெரிவித்துள்ளார்.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |