VJ அர்ச்சனா மகள் சாரா வாங்கிய கார் - விலை எவ்வளவு தெரியுமா?
தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
சாரா
'காமெடி டைம்' நிகழ்ச்சி மூலம், பிரபலமான தொகுப்பாளராக அறியப்பட்டவர் அர்ச்சனா. தொடர்ந்து இவர் தொகுத்து வழங்கி வரும் சரி கம பா, சூப்பர் மாம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆங்கரிங்கை தாண்டி, சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படத்தில் தன்னுடைய மகளுடன் நடித்திருந்தார். மேலும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும், கலந்து கொண்டார். தற்போது அவருடைய மகளும் ஒரு தொகுப்பாளினியாக இருக்கிறார்.
புதிய கார்
ஜீ தமிழில் சூப்பர்மாம் நிகழ்ச்சியை அர்ச்சனாவோடு சாராவும் தொகுத்து வழங்கி இருந்தார். மறுபுறம் சாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் சாரா சாரா மகேந்திரா பேட்மேன் (Mahindra batman ) காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இவர் வாங்கியிருக்கும் காரின் விலை ரூ.30 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து, இந்த காரை சொந்த உழைப்பிலேயே அவர் வாங்கியிருப்பதாக அர்ச்சனா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவரது ரசிகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.