பிரபல நடிகருடன் நெருக்கமாக சமந்தா ஆடிய நடனம்! வைரலாகும் காணொளி
பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா ஆடியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி என பல இடங்களில் நடித்து பிரபலமானார்.
தெலுங்கு படத்தில் நடித்த போது நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யாவை காதலித்த சமந்த அவரை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்பு தனது நடிப்பில் இருவரும் கவனம் செய்து வருகின்றனர்.

பிரபல நடிகருடன் நடனம்
இந்தியில் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் சமந்தா அண்மையில் கலந்துகொண்டார்.
அதில் ‘நான் ஏன் சைதன்யாவை பிரிந்தேன்’ என தனது விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது செம வைரலாக பேசப்பட்டது.
காபி வித் கரண் ஷோவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உடன் கலந்துகொண்ட சமந்தா, செட்டுக்குள் ஒன்றாக நுழைந்துள்ளனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமந்தாவை அக்ஷய் தூக்கி வருகிறார்.
இது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. மேலும், என்னென்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது என்பது முழு எபிசோடும் வெளிவந்தால் தான் தெரியும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சமந்தா நடிகர் அக்ஷய் குமாருடன் சேர்ந்து புஷ்பா பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வெளியாகி செம வைரலாகி வருகிறது.
The Cool ? and the Killer ? raising temperatures in the house! #HotstarSpecials #KoffeeWithKaranS7 episode 3 starts streaming on 21st July. @karanjohar @akshaykumar @Samanthaprabhu2 @apoorvamehta18 @aneeshabaig @jahnvio @Dharmatic_ pic.twitter.com/QMXB0KBwab
— Disney+ Hotstar (@DisneyPlusHS) July 20, 2022