கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததற்கான காரணம் என்ன? ஓபனாக உடைத்த சமந்தா
நடிகை சமந்தா ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவரது முன்னாள் கணவர் குறித்த தகவலை பகிர்ந்துள்ள நிலையில் இவர்களின் விவாகரத்திற்கு காரணம் இதுதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா தற்போது தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகின்றார்.
சென்னையில் பிறந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பை முடித்த அவர் 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையானார்.
தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யா என்பவரை 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
ரசிகரின் கேள்விக்கு பதில்
சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அவர்கள் கேட்கும் கேள்விக்கு கூட அவர் கோபத்தை காட்டவில்லை. சமந்தாவிடம் 'தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு ரீலாக மாற்ற விரும்பினால், ப்ளூப்பராக நீங்கள் என்ன சிரிப்பீர்கள்? வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன? ' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு சமந்தா "எனது வாழ்க்கையில் எடுத்த பல முடிவுகளில் என் பார்ட்னரின் influence இருந்திருக்கிறது." "எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை கூட நான் இத்தனை காலம் மறந்துவிட்டு இருந்திருக்கிறேன்" என சமந்தா பதில் அளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |