புதிய தோற்றத்தில் களமிறங்கிய நடிகை சமந்தா... குவியும் லைக்குகள்
நடிகை சமந்தா புதிய தோற்றத்தில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் கருத்து வேறுபாடுகள் காரைணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அதனை பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார்.
சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற செயல்களில் இறங்கினார். நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
இந்நிலையில் வித்தியாசமான ஆடையில் புதிய தோற்றத்தில் நடிகை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |