முக்கிய பிரபலத்துடன் ஜோடியாக சென்ற விஜய பட நடிகை! அதிர்ச்சியில் உறைந்த இணையவாசிகள்
சமந்தா பிரபல நடிகருடன் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யாருடன் முதல் திரைப்படம் நடித்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் நடித்து தான் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா.
இவரின் முதல் படம் நினைத்தளவு வெற்றியை தராவிட்டாலும், இவரின் அடுத்தடுத்து வெளிவந்த திரைபடங்கள் மக்களுக்கு பிடித்தமானதாகவும் விரும்பி பார்க்கும் திரைப்படமாகவும் மாறியுள்ளது.
இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவரின் சம்பளம் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே செல்கிறது.
இதனை தொடர்ந்து சமந்தா விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல தமிழ் சினிமாவில் முன்னணி இருக்கும் நடிகர்களுடன் கலக்கி வருகிறார்.
மேலும் சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கோயில் கோயிலாக சுற்றும் சமந்தா
இந்த நிலையில், நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா தற்போது, இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் “சாகுந்தலம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர் சமிபத்தில் விளம்பர நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்னர், ஹைதராபாத்திலுள்ள பெத்தம்மா கோவிலுக்கு சமந்தாவும், தேவ் மோகனும் ஜோடியாக சென்றுள்ளார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையப்பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் குறித்து திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், “ அதற்கு நீங்கள் இருவரும் தான் ஜோடியாக செல்ல வேண்டுமா? எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.