முதல்ல அதை நிறுத்துங்க.. சமந்தாவின் கவர்ச்சி ஆடை ட்ரோலுக்கு கண்டனம் தெரிவித்த சமந்தா!
நடிகை சமந்தா சமீபத்தில் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் பச்சை நிற உடையில் கவர்ச்சிகரமாக சென்றிருந்தார்.
அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.
கடந்த 3 நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்த அந்த புகைப்படம், ஏகப்பட்ட கமெண்ட்ஸ்கள் மற்றும், சில விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா “முதலில் பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும்.

பெண்களின் ஆடையை வைத்து அவர்களை தீர்மானிப்பது, அவர்களின் இனம், படிப்பு, சமூக அந்தஸ்த்து, நிறம் என ஒரு பெரிய பட்டியலே நீண்டு கொண்டிருக்கிறது.
மேலும், நாம் இப்போது 2022-ல் இருக்கிறோம். இப்பவும், பெண்களை அவர்கள் அணியும் உடையை வைத்து இப்படி ஜட்ஜ் பண்ணுவதை உடனடியாக நிறுத்துங்கள்.
பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு நம்மை மேம்படுத்துவது கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.