உணவில் உப்பு அதிகமாக சேர்ப்பவரா நீங்கள்? இனியும் அந்த தவறை செய்யாதீங்க
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று பழமொழி இருந்தாலும் சற்று அதிகமாக உப்பை எடுத்துக்கொண்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பதிவில் காணலாம்.
தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு
உலக சுகாதார அமைப்பின் படி, நாம் தினமும் 5 கிராமுக்கு மேல் உப்பைப் பயன்படுத்தக்கூடாது. அதிக உப்பை உட்கொள்வதால் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு அதிகமாகிறது.
ஆனால் மக்கள் தினமும் 9 முதல் 12 கிராம் உப்பு சாப்பிடுகிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உப்பினால் ஏற்படும் பக்கவிளைவுகள்
உணவில் அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் இதயம் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
உயர் இரத்த அழுத்தம் கண்பார்வையை குறைக்கும். உணவில் குறைந்த அளவு உப்பை உட்கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, உணவின் சுவையை முழுமையாக வைத்திருக்கிறது.
உணவில் அதிக உப்பை உட்கொள்வது உடல் பருமனை அதிகரிப்பதுடன், கலோரி மற்றும் கொழுப்பும் அதிகரிக்கின்றது. இதுமட்டுமில்லாமல் இரைப்பை கட்டிகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அதிக உப்பை உட்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதிக சோடியம் உடலில் சேரும்போது, அதை ஜீரணிக்க சிறுநீரகங்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.
அதிக உப்பை உட்கொள்வதால், முகத்தில் வீக்கம் மற்றும் கை கால்களில் வீக்கம் ஏற்படலாம்.
