டம்ளர் நீரில் சிறிது உப்பு: கஷ்டம் நீங்கி வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கொட்டும்
ஆன்மிகத்தில் மனிதர்களின் பணக்கஷ்டத்தினை தீர்ப்பதற்கு பல வழிமுறைகளை முன்னோர்கள் கூறியுள்ளனர். அதில் ஒன்று தான் உப்பு.
ஆன்மீகத்தில் உப்பின் மகத்துவம்
ஆன்மீகத்தில் உப்பின் மகத்துவம் அளப்பரியது. நீரிலே பிறந்து, நீரிலே கரையும் தன்மை கொண்ட உப்பை மனிதர்களின் கஷ்டம் தீர்க்க எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மகாலஷ்மி கடலில் இருந்துதான் தோன்றினார் என்றும் எனவே உப்பு கடலில் இருந்து கிடைக்கப்பெறுவதால் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருப்பதோடு, துஷ்ட சக்தியை விரட்டும் வல்லமையுடன், திருஷ்டியை போக்கும் குணமும் உண்டு.
மனிதர்களாகிய நமக்கு பணக்கஷ்டமும் மனக்கஷ்டமும் தான் பெரும் கவலை. பணமில்லையே என்று மனதளவில் தவித்துப் போகிறோம். பணமிருந்தும் நிம்மதி இல்லையே என்றும் நொறுங்கிப் போகிறோம்.
தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை! நிபுணர்கள் அளித்த குட்நியூஸ்
தீய சக்திகளின் ஆக்கிரமிப்பு
நமக்கே தெரியாமல், தீயசக்திகள் நம் வீட்டுக்குள் நுழைந்து, நமக்குள் எதிர்மறை எண்ணங்களைக் கொடுக்கின்றன. நமக்குள் இருக்கிற நேர்மறை சிந்தனைகளை மழுங்கடிக்கும் வல்லமை தீயசக்திகளுக்கு உண்டு.
இவற்றையெல்லாம் போக்கும் சக்தி ஒரு துளி உப்புக்கு உண்டு என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
நன்றாகக் குளித்துவிட்டு, ஒரு டம்ளரில் நீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது கல்உப்பை போட்டு, பூஜை அறையில் வைத்து நன்றாக வேண்டிக்கொள்வதுடன், அந்த நீரை வீட்டில் உள்ள தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.
மறுநாள் குளித்து விளக்கேற்றிவிட்டு, குறித்த டம்பளரில் உள்ள உப்பு நீரை, குளியலறையில் தண்ணீரை திறந்துவிட்டு ஓடும் தண்ணீரில் கலப்பது போன்று அந்த உப்பு நீரையும் ஊற்றிவிட வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வந்தால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்குவதுடன், நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதுடன், துஷ்ட சக்திகளின் ஆக்கிரமிப்பும், எதிர்மறையான சிந்தனைகள் நமக்கு வராமலும் தடுக்க முடியும்.
30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனி !உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?