தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை! நிபுணர்கள் அளித்த குட்நியூஸ்
பொதுவாக பெண்கள் மத்தியில் தங்க நகைகள் வாங்கும் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும். அதிலும் தென்னிந்தியாவில் நகைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. திருமணம் மட்டுமல்லாது, பிற சடங்குகளிலும், தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது எனலாம்.
ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
உக்ரைன் ரஷ்யா போர் நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில், இன்றும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
Whatsapp ஸ்டேட்டஸில் இப்படி கூட செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
தங்கத்தின் இன்றைய விலை
சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து சவரன் ரூ.39,424-க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.18 குறைந்து ரூ. 5,376 என்ற விலையிலும் ஒரு சவரன் விலை ரூ144 குறைந்து ரூ. 43,008 ஆகவும் உள்ளது. 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,037-க்கு விற்பனை ஆகிறது.
உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான அணுகுமுறை உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உயிரை பறிக்கும் விஷமாக மாறும் பழங்கள்... இந்த பழங்களை சேர்த்து சாப்பிடாதீர்கள்