Bigg Boss 10: நீயும், உன் கூட்டமும் என்னை அடிச்சி பாருங்கடா? டிடிஎஃப்-ஐ வைத்து மக்களை நேரடியாக தாக்கிய ஜேசன்
Jasan, Munniyamma Trigger TTF Vasan: பிக்பாஸ் இன்று கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்கினால் போட்டியாளர்கள் தனது வன்மத்தை கொட்டி வருகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரம் தன்யா வீட்டின் தலைவராக இருந்து வருகின்றார்.
10 வாரங்களைக் கடந்து செல்லும் நிலையில், கடந்த வாரம் வாரம் பிக்பாஸ் குரல் இல்லாமல் நிகழ்ச்சி சென்றுள்ள நிலையில், இந்த வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிலிருந்து முத்தழகி மற்றும் அவினாஷ் என இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் வீட்டில் வினோத், அன்சர், தன்யா இவர்களைத் தவிர மற்ற ஏழு பேர் நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆதலால் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்களா? அவ்வாறு வெளியேற்றும் நபர் யாராக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்து வருகின்றது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேசன் நடந்து கொண்ட விதம் விஜய்சேதுபதியின் தன்மானத்திற்கு இடையூறாக இருந்த நிலையில், விஜய் சேதுபதியை குறித்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க வேண்டாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இன்றைய புதிய டாஸ்க்
இந்நிலையில் இன்று கடவுள் பாதி மிருகம் பாதி சேலஞ்ச் என்ற புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அரியணையில் அமர்ந்திருக்க அவர்களை வெறுக்கும் நபர்கள் எதிரே இருந்து கொண்டு போன் செய்து அவர்களை கோபத்தில் ஆழ்த்துகின்றனர்.
எதிரிகள் என்னதான் கேள்விகளை கேட்டாலும், பொறுமையுடன் புன்னகை மாறாமல் அரியணையில் இருக்கும் போட்டியாளர்கள் பதில் கூற வேண்டுமாம்.
அந்த வகையில் முனியம்மா அரியணையில் இருந்த தருணத்தில் லக்ஷ்மி ப்ரியா சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஆரம்பத்தில் சிரித்துக் கொண்டிருந்த முனியம்மா அப்படியே பதில் கூறி முடித்தாரா என்ற கேள்வி எழுப்பும் நிலையில் ப்ரொமோவை முடித்துள்ளனர்.
டிடிஎஃப் வாசன் அரியணையில் அமர்ந்திருக்கும் போது அவரை வழக்கம் போல் முனியம்மா கோபப்படுத்தும் விதமாக பேசினார். மேலும் ஜேசனும் டிடிஎஃப் வாசனை கடுப்பேற்றும் விதமாக பேசியுள்ளார்.
டிடிஎஃப்-பிற்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களைக் குறித்து ஜேசன் பேசியுள்ளார். என்னைத் தாண்டி நீயும் உன் கூட்டமும் என்ன அடித்து பாருங்கடா என்று மக்களை கடுப்பேற்றும் விதமாகவே பேசியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |