பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 1000 கோடி சம்பளம் கேட்ட நடிகர் - ஆடிப்போன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபலம் ஒருவர் ரூ.1000 கோடி சம்பளம் கேட்டுள்ள விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் இந்தியில் தான் தொடங்கப்பட்டது. இதுவரை 15 சீசன்களை கடந்த நிலையில், இவற்றை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி உள்ளார்.
மேலும், தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி உள்ளனர்.
இந்தியைப் போல் பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இந்தி பிக்பாஸ் 16 வது சீசனுக்கு சல்மான் கான் தொகுத்து வழங்க ரூ.1050 கோடி சம்பளமாக கேட்டு உள்ளாராம்.
கடந்த சீசனில் ரூ.350 கோடி சம்பளமாக வாங்கிய சல்மான் கான், தற்போது அதைவிட மூன்று மடங்கு அதிகமாக கேட்டுள்ளது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சற்று கலக்கமடையச் செய்துள்ளது.

இந்த சம்பளத்தை கொடுத்தால் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம் சல்மான் கான். என்னதான் இவர் சம்பளத்தை உயர்த்தி கேட்டாலும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அவரிடம் பேசி சம்மதிக்க வைத்து விடுவார்களாம்...
கூடிய விரைவில் இதைப்பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.