இரவானால் இப்படி ஒரு பழக்கமா? என் உடல் அதற்கு பழகிவிட்டது... சாய் பல்லவி ஓபன் டாக்
நடிகை சாய் பல்லவி அண்மையில் பேட்டியொன்றில் தனது வாழ்க்கை முறை பழங்கள் குறித்து வெளியி்ட்டுள்ள தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சாய் பல்லவி
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.
அந்தப் படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமின்றி சாய் பல்லவிக்கு நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுக்கொடுத்தது.
அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் கிளாமர் இல்லாமல் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் தண்டேல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் பிரம்மண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம்தான் ராமாயணா.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சாய் பல்லவி அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், " இரவு ஒன்பது மணிக்கு தூங்கி காலை நான்கு மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் எனக்கு இருக்கிறது.
நான் ஏன் காலை 4 மணிக்கு எழுந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் படிப்பு, வேலை என ஓட ஆரம்பித்தபோதே எனக்கு இந்த பழக்கம் தொடங்கியது.
நான் ஜார்ஜியாவில் படித்துக்கொண்டிருக்கும்போது அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். தனால் இந்த முறை என் உடலுக்குப் பழகிவிட்டது.
கல்லூரி முடிந்து நான் வீட்டில் ஓய்வில் இருந்தாலும் இரவு 9 மணிக்கு தூங்கி காலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவேன். அதற்கு மேல் நானே தூங்க முயற்சித்தாலும் எனக்கு தூக்கம் வராது. அதன் காரணமாக தினசரி அதிகாலை 4 மணியிலிருந்தே எனது வேலைகளை நான் செய்ய தொடங்கிவிடுகிறேன்"
பல படப்பிடிப்புகளில் இரவு 9 மணிக்கு மேல் சென்றால் அடம் பிடித்தாவது நான் தூங்க சென்றுவிடுவேன் என குறிப்பிட்டடுள்ளார். குறித்த விடயம் சாய் பல்லவிக்கு இப்படி ஒரு பழக்கமா என இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
