எந்நேரமும் கவலையில் தவிக்கும் ராசிக்காரங்க இவங்கதானாம்...!
பொதுவாக 12 ராசிகளுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் உள்ளன என கூறுவார்கள்.
சில ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் கொடி கட்டிப் பறப்பார்கள். ஒரு சில ராசிக்காரர்கள் சுயநலவாதிகளாகவும் தற்பெருமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால், எந்நேரமும் ஒருவித சோகத்துடன் இருக்கும் ராசிக்காரர்களைப் பார்த்ததுண்டா...
அனைவரும் தங்களுக்கு எதிராக சதி செய்வதாகவும், வாழ்க்கையில் எந்நேரமும் வலி மற்றும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து, வாழ்க்கை முழுவதும் துன்பம் மற்றும் வலி என்பவற்றை பெறும் ராசிகள் எவை என பார்க்கலாம்...
ரிஷபம்
மாற்றங்களை வெறுக்கும் இந்த ராசிக்காரர்கள், எப்பொழுதுமே ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் வாழவே ஆசைப்படுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் சிறியதாக ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால்கூட, கலக்கமடைந்து வருத்தமடைந்து, பாரிய வலியையும் துன்பத்தையும் உணர்கிறார்கள்.
கடகம்
மிகுந்த இரக்க குணமுடைய கடக ராசிக்காரர்கள், மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். இவர்கள் சிறந்த ஆளுமைப் பண்பைக் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை அதிகமாக நேசிப்பதால் அவர்களுக்கு நேரும் துன்பங்களை தனக்கானதாக எடுத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் தங்கள் வாழ்வில் எந்நேரமும் துன்பம் இருப்பதாக நினைத்து கவலையுடன் வாழ்க்கையை நகர்த்துவார்கள்.
விருச்சிகம்
தங்களது தனிப்பட்ட உறவுகளில் அதிக ஈடுபாடு கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள், அனைத்து விடயங்களையும் தீவிரமாகவும் ஆழமாகவும் சிந்திப்பார்கள். அவர்களது வேலை சரியாக நடக்கவில்லை என்றால், எளிதில் கவலையடைவார்கள்.
அவர்களது நிலையை அதிகமாக எண்ணி வருத்தப்படுவார்கள். அதுமட்டுமின்றி இவர்கள் யாரிடமும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.
மகரம்
பொதுவாகவே மகர ராசிக்காரர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளுடன் போராடும் குணம் படைத்த இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதுமே ஒருவித கவலையுடனேயே இருப்பார்கள்.