துன்பம் வரும் வேளையில சிரிங்க
இந்த உலகில் யாருக்குத்தான் கவலை இல்லை?
கவலை இல்லாத மனிதன் என்று கூறினால் அது பிறந்த குழந்தை மட்டும்தான். மற்றப்படி அனைவருக்குமே வாழ்வில் துன்பமும், சோர்வும், அதிருப்தியும் இருக்கவே செய்யும்.
அதற்காக எந்நேரமும் அதை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் நமது உடலும் மனமும் சோர்வடைந்துவிடும். அதனால் பல நோய்களும் ஏற்படக்கூடும்.
அதீத கவலையால் ஏற்படும் நோய்கள்
- இரத்த அழுத்தம் ஏற்படும்.
- உடல்,மன பலத்தை இழக்கச் செய்யும்.
- நரம்பு தளர்ச்சியை உண்டுபண்ணும்.
- இருதய நோய் ஏற்படும்.
கவலையை போக்கும் ஒரு மருந்தென்றால் அது சிரிப்பு தான். வெறுமனே கவலைப் பட்டுக்கொண்டிருந்தால் அது நம்மை விட்டு நீங்காது.
அதிலிருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். கவலையாக இருக்கும் சந்தர்ப்பங்களில் நன்றாக சிரிக்க முயற்சிக்க வேண்டும். கவலைகளை மறக்க பிடித்த செயல்களில் ஈடுபடலாம், மற்றவர்களுடன் உரையாடலாம்.
சிரிப்பு தரும் நன்மைகள்
- சிரிப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று கூறுவார்கள்.
- சிரிப்பு ஒரு மகிழ்ச்சியான உணர்வு.
- சிரிப்பதால் வயிறு, மார்பு போன்ற இடங்களில் உள்ள தசைகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.
- மனிதனை மனிதனாக வாழ வைக்க சிரிப்பு மிகவும் உதவுகிறது.
- நல் வாழ்வு வாழ வழி செய்யும்.
எனவே கவலைகளை மறந்து சிரியுங்கள். சிரிப்பு உங்களை சிறப்பாக வாழ வைக்கும்!