திருமணத்திற்கு முன்பே கணவர் இப்படியொரு சர்ப்ரைஸ் கொடுத்தாரா? மனம் உருகிய நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமணத்திற்கு முன்பு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
நடிகை ஹன்சிகா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, முதலில் குழந்தை நட்சத்திரமாகவே படத்தில் அறிமுகமானார்.
பின்பு முன்னணி நடிகர்களுடன், ஹன்சிகா நடித்து பிரபலமாகிய இவர், சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
ஹன்சிகாவின் குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்துள்ளார். கடந்த 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் 450 வருடம் பழமையான மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நடைபெற்றது.
இந்நிலையில், இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றது.
திருமணத்திற்கு முன்பு கொடுத்த சர்ப்ரைஸ்
ஒவ்வொரு எபிசோடுகளாக வெளிவரும் இவர்களின் திருமண காணொளியின் ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி திருமணத்திற்கு முன்பு ஹன்சிகாவின் கணவர் சோஹைல், தனது மனைவிக்காக அசத்தலான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
ஆம் ஹன்சிகா பெயரை தனது கையில் பச்சை குத்தவும் செய்ததோடு, அத்தருணத்தில் ஹன்சிகாவிற்கு வீடியோ காலும் செய்துள்ளார்.
இதனை அவதானித்த ஹன்சிகா தான் ஒரு ஊசி போடுவதற்கு கூட பயப்படுவேன்... எனக்காக டாட்டூ குத்திக் கொண்டுள்ளார் என்று மனம் உருக பேசியுள்ளார்.