சில சமயங்களில் மனிதர்களை கட்டி போடும் கவலை
பொதுவாக தற்போது மனிதர்களை சாய்க்கும் ஒரு கருவியாக கவலை இருக்கின்றது.
கவலையாக இருக்கும் போது பக்கத்தில் என்ன நடந்தாலும் நம்முடைய மூளைக்கு ஏறாது.
இவற்றையெல்லாம் பண்ணும் கவலை ஏன் வருகின்றது? என யாராவது சிந்தித்து பார்த்ததுண்டா?
நாம் நினைத்த விடயம் நடக்க வில்லையென்றால், யாராவது திட்டி விட்டால், நாம் நம்பியிருந்தவர்கள் ஏதாவது தவறு செய்து விட்டால், நினைத்த காரியம் கைக்கூடாமல் சென்று விட்டால் இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் நாம் கவலையடைகிறோம்.

கவலை என்பது ஒரு மனிதனுக்கு வரும் உணர்வு அல்ல..ஒவ்வொரு மனிதனுக்கு வரும் ஒரு உணர்வு.
இதனை புத்தகங்களில்.“ உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும் போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சி தான் கவலை.” என கூறுகிறார்கள்.
நாம் யாராவது தாக்க வேண்டும் என நினைத்தால் அவர்களை மன ரீதியாக சோர்வடைய வைக்க வேண்டும். அப்போது தான் கவலை பிறக்கின்றது.
அந்த வகையில் கவலை இரண்டு வழிகளில் எம்மை தாக்குகின்றது.

1 வேறு நபரால் கவலையடைதல்
பொதுவாக கவலையாக இருப்பதற்கு நம்முடைய உறவினர்கள் குழந்தைகள் இப்படி யாராவது காரணமாக இருப்பார்கள். நாம் ஏதாவது நினைத்து கொண்டு இருப்போம் ஆனால் அவர்கள் அதனை செய்யமாட்டார்கள்.
அப்போது நாம் கவலையடைந்து மனம் சோர்ந்திருப்போம். சிறிது நேரம் சென்ற பின்னர் தான் கவலையாக இருந்ததிற்கு நடந்த விடயங்களும் எந்த விதமான தொடர்பும் இல்லையென்று.

2. நம்மையே கவலைப்படுத்தி கொள்வது
இந்த விடயத்தை காதலில் தோற்றவர்களிடம் தான் அதிகமாக பார்க்கலாம். இவர் தான் நம்முடைய உலகம் என நினைத்து கொண்டிருக்கும் போது அது நம்மை விட்டு சென்று விடும்.
இந்த விடயத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நம்முடைய மனதில் கவலையாக மாறி கொள்கின்றது. இதனை மறக்க கவலையிலிருந்து வெளியில் வருவதற்கு பல வருடங்கள் பல நாட்கள் செல்லலாம்.
சாதாரணமாக மனிதர்களை தாக்கும் கவலைக்கு என தனியாக சில கோட்பாடுகள் இருக்கின்றன. அதாவது ,“ அறிதிறன், உணர்திறன், உணர்வுசார் நுண்ணறிவு, உணர்வு நிலை , உள்ளுணர்தல், தன்மையங்கள், தன்விழிப்புணர்வு, விழிப்புணர்வு” என்பவற்றை கூறலாம்.

1. அறிதிறன்
அறிதிறன் எனக் கூறும் போது பல விடயங்கள் அதில் உள் அடங்கும் சில விடயங்களில் உள்ளிருக்கும் அர்த்தங்களை அறிந்து செயற்படுவதால் நம்முடைய கவலையை கட்டுபடுத்திக் கொள்ளலாம்.
2. உணர்திறன்
ஒரு விடயத்தில் இருக்கும் உண்மைதன்மையை சரியாக அறிந்து கொள்வது தான் உணர்திறன் எனப்படுகின்றது. இதனை நாம் சரியாக விளக்கம் கொடுக்க முடியாது. ஏனெனின் இது மனது சம்மந்தப்பட்ட ஒரு விடயமாகும்.
3. உணர்வுசார் நுண்ணறிவு
நம்முடன் இருக்கும் ஒரு உறவு நமக்கு துரோகம் செய்து விட்டால் அதனை நாம் கண்டுபிடித்து விட்டால் கோபத்தால் அவர்களை தாக்குவதற்கு முன்னர் அங்குள்ள நியாயங்களை சற்று நேரம் சிந்தித்து பார்க்க வேண்டும் அந்த தருணங்களை உருவாக்க காரணம் யார்,?
இந்த விளக்கம் உணர்வுசார் நுண்ணறிவை புரிய வைப்பதற்கு மட்டும் இது தான் இதன் விளக்கமல்ல.. வாழ்க்கை உணர்த்து சில விடயங்களை வைத்து தான் உணர்வுசார் நுண்ணறிவு பெற்றுக் கொள்ளலாம்.

கவலை பற்றி சில வரிகள்...
- இறந்தகாலமும் எதிர்காலமும் உங்களுக்கு வேதனை ஏற்படுத்த முடியாது, ஏனென்றால் அவ்விரண்டும் இப்போது இல்லை. நீங்கள் வேதனைப்படுவது உங்கள் நினைவுகளாலும் கற்பனைகளாலும் தான்.
இறந்தகாலமும் எதிர்காலமும் உங்களுக்கு வேதனை ஏற்படுத்த முடியாது, ஏனென்றால் அவ்விரண்டும் இப்போது இல்லை. நீங்கள் வேதனைப்படுவது உங்கள் நினைவுகளாலும் கற்பனைகளாலும் தான்.
நீங்கள் செய்ய விரும்பும் விஷயத்திற்கு எல்லோருடைய சம்மதத்தையும் ஒருபோதும் பெறமுடியாது. அதனால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
நான் வளர்கிறேனா அல்லது வாடுகிறேனா என்ற கவலை உங்களுக்கு தேவையில்லை. ஆனால் நீங்கள் ஆனந்தமாக வளர்ந்து வாழ்கிறீர்களா அல்லது துன்பத்தில் தளர்ந்து தடுமாறுகிறீர்களா என்பதைப் பற்றிய நிலையை நினைவு கூறுங்கள்.
ஒவ்வொருவரிடமும் நீங்கள் நல்லிணக்கமாக இருந்தால், அது உங்களுக்கு பல வழிகளில் திரும்ப வரும். ஆனால் அது திரும்ப வருகிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்
கடைசி கணம் வரை நீங்கள் ஆனந்தமாய் வாழ்ந்தால், மரணத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அதுவும் ஆனந்தமானதாகவே அமையும்.
வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.
நீங்கள் இரு வழிகளில் விரிவடைய முடியும் - ஒன்று அடக்குமுறை, மற்றொன்று அரவணைத்தல். ஒன்று துன்பம் தரும், மற்றொன்று இன்பம் தரும்.
மக்களிடமிருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயன்றால், வலியே மிஞ்சும்.
மனதளவில் எவராலும் உங்களுக்கு வலி ஏற்படுத்த முடியாது. நீங்கள்தான் உங்களைச் சுற்றி நிகழும் ஏதோவொன்றிற்கு எதிர்செயலாக வலியை உருவாக்குகிறீர்கள்.
வலி, துயரம், அல்லது கோபம் வந்தால், அது உங்களுக்குள் பார்ப்பதற்கான நேரம், உங்களைச் சுற்றி அல்ல.
யாரோ ஒருவர் வலியில் இருக்கும்போது உங்களுக்கு துளியும் வலிக்கவில்லை என்றால், உங்கள் மனிதத்தன்மையை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.