காயமடைந்த பறவைக்கு உணவளிக்கும் சச்சின்! வைரல் வீடியோ
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடற்கரை ஓரத்தில் காயமடைந்த புறா ஒன்றினை காப்பாற்றியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர், இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர், அவர்களுக்காகவே இவர் பலவிதமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை வென்று வருகிறது.
ஆம் கடற்கரை ஓரத்தல் காயமடைந்த பறவையினை காப்பாற்றியதோடு, அதற்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்துள்ளார். பறவைக்கு ஆறுதல் கூறும் விதமாக 'இது நிச்சயம் பிழைத்துவிடும்' என்று நம்புகிறேன் என்று கூறுகிறார்.
இவ்வாறு பறவையிடம் பேசிக்கொண்டே சென்றவர் அந்த வழியில் சென்ற ஒருவரிடம் இந்த பறவையை காப்பாற்ற எங்கு கொண்டு செல்வது என்று கேட்டதோடு, 'இந்த பறவை காப்பாற்றப்பட வேண்டும், இதனை இப்படியே விட்டுவிடக்கூடாது' என்றும் கூறுகிறார்.
இறுதியாக உணவகம் ஒன்றினை அடைந்த சச்சின் அங்கு பறவைக்கு சில விதைகளை வாங்கிக் கொடுக்கின்றார். பின்பு அந்த பறவைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பறவையின் உடல்நிலையை சோதித்த நபர் சச்சினிடம், 'பறவையின் இறக்கைகள் நல்ல நிலையில் தான் இருக்கிறது, ஆனால் அதன் இடது காலில் மற்றும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது' என்று கூறுவதுடன் இந்த வீடியோ நிறைவு பெறுகிறது.