இரண்டு நாட்களாக மலச்சிக்கலா? அப்போ இந்த விதையில் ஜீஸ் செய்து குடிங்க!
பொதுவாக தற்போது இருக்கும் தவறான உணவு பழக்கங்கள் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினை அடிக்கடி ஏற்படுகின்றது.
இதனை சரிச் செய்வதற்கு வாழைப்பழங்கள், பப்பாளிப்பழங்கள் என பல்வேறுப்பட்ட பழங்களை அடிக்கடி எடுத்து கொள்வோம்.
ஆனால் இது எல்லோருக்கும் சிறந்த பயனை தருவதில்லை. மாறாக இவ்வாறு பழங்கள் சாப்பிடும் பொழுது மேலும் இறுக்கம் அதிகமாக வாய்ப்பு இருக்கின்றது.
அந்த வகையில் இது போன்ற பிரச்சினைகளை ஒரு குட்டி விதை சரிச் செய்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா? ஆம், கருப்பாகவும் குட்டியாகவும் இருக்கின்ற சப்ஜா விதைகளை நீரில் கலந்து குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை சரிச் செய்யப்படுகின்றது.
அது மட்டுமன்றி உடல் சூட்டை தணித்து, இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கின்றது. இதன்படி, சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
சப்ஜா விதைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. தவறான உணவு பழக்கம் காரணமாக நெஞ்சு எறிச்சல், வயிற்று வலி, மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதற்கு சப்ஜா விதைகள் கொஞ்சம் நீரில் போட்டு வைத்திருந்து குடித்தால் சரியாகி விடும்.
2. சப்ஜா விதைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் கொஞ்சமாக நீரில் விட்டு ஊற வைத்திருக்கவும். அதனை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை மின்னல் வேகத்தில் குறையும். சப்ஜா விதைக்கு இப்படியொரு சக்தியும் இருக்கின்றது.
3. எலுமிச்சை சாறு, சர்க்கரை, சப்ஜா விதைகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து குடித்து வந்தால் பசியை கட்டுபடுத்த முடியும். எந்நேரமும் சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் இந்த பானத்தை குடிக்கலாம்.
4. ஸ்மூத்தியில் சப்ஜா விதைகளை கலந்து சாப்பிடும் பொழுது ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
5. திரவ உணவுகள் அதிகம் எடுத்து கொள்பவர்கள் கஞ்சியுடன் சப்ஜா விதைகளை கலந்து கொள்ளவும். இவ்வாறு செய்வதால் அவர்கள் சாப்பாட்டை மென்று விழுங்குவதற்கு இலகுவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |