இது தேவையா? மூக்கை அழகுபடுத்த பிறந்து 5 நாளான குழந்தையை விற்ற தாய்!
தனது மூக்கை அழகுபடுத்துவதற்கான சிகிச்சைக்காக பிறந்து 5 நாளான தனது குழந்தையை விற்பனை செய்ததாகக் கூறப்படும் ரஷ்ய பெண்ணொருவர் கைது செய்யப்படடுள்ளார்.
33 வயதான இப்பெண், ரஷ்யாவின் தகேஸ்தன் எனும் தென் பிராந்தியத்திலுள்ள கஸ்பிஸ்க் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இப்பெண் ஒரு தம்பதியிடம் மேற்படி ஆண் குழந்தையை விற்பனை செய்தார்.

அக்குழந்தையை வாங்கிய பின்னர், அக்குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதால் அதை வைத்தியசாலைக்கு மேற்படி தம்பதியினர் கொண்டு சென்றனர்.
வைத்தியசாலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கு அதன் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரினர்.

இதன்போது, பொலிஸாருக்கு குழந்தை விற்பனை விடயம் தெரியவந்தையடுத்து, அக்குழந்தையின் தயார் உட்பட ஒரு குழுவினரை பொலிஸார் கைது செய்தனர்.
தனது மூக்கை அழகுபடுத்திக்கொள்வதற்கான பணத்தை திரட்டுவதற்காக அக்குழந்தையை மேற்படி பெண் விற்பனை செய்துள்ளார் என உள்ளூர் ஊட கங்கள் தெரிவித்துள்ளன.