உக்ரைன் மீது ரஷியாவின் தீவிர போர் - 100-க்கான இராணுவ வீரர்கள் பலி! பதற்ற நிலை (LIVE)
உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைவதற்காக எதிர்ப்பு தெரிவித்து ரஷியா உக்ரை நாட்டில் போர் தொடுக்க எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.
இதனால், ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்நிலையில், ரஷிய படைகளில் உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், ரஷியாவில் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரெயில் சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இணைய வசதி முழுவதும் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார்.
தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையில், ரஷிய படைகளில் உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன.
உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. மேலும், ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன.
ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ரஷியா போர் தொடுத்துகொண்டே இருக்கும் நிலையில், திலடி தாக்குதலாக லுஹன்ஸ்க் பகுதியில் ரஷியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷிய ஹெலிகாப்டர் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அதேப்போல் உக்ரைன் தரப்பில் நூற்றுக்கணக்கில் ராணுவ வீரர்கள் ரஷிய படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.