காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடலாமா? கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
காய்கறிகளை நாம் சமைக்காமல் உண்பதால் கிடைக்கும் நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சமைக்காலம் காய்கறிகளை உட்கொள்ளலாமா?
பொதுவாக மனிதர்கள் காய்கறிகளை சமைத்து உண்பதை தான் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பல முக்கியமான சத்துக்கள் வீணாகி விடுகின்றது.
இதனைத் தவிர்ப்பதற்கு தவிர பல நாடுகளில் செடிகளின் இளந்தளிர்களை சாலட் என்ற பெயரில் உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சில காய்கறிகள் மற்றும் தானியங்களை முளை விடும் பருவத்தில் சேகரித்து உணவாக உட்கொள்ளும் நிலையில், இதற்கு மைக்ரோ கிரீன் என்று அழைக்கப்படுகின்றது.
இவ்வாறான வளர்க்கப்படும் தாவரங்கள் எந்த ரசாயன பூச்சி மருந்துகளும் இல்லாமல், இயற்கையாளவே வளர்க்கப்படுகின்றது.
மேலும் இந்த இளம் தளிர்களில் சுவை மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதுடன், வைட்டமின்கள், தாதுக்கள், அஸ்கார்பிக் அமிலம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனை உணவாக உட்கொள்வதும் மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
மைக்ரோ கிரீன்ஸ், உடல் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி, இதய நோய், வகை-2 நீரிழிவு, சில வகை புற்றுநோய் மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
இயற்கையான ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மைக்ரோ கிரீன்ஸ் சிறந்த மாற்றாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
