இட்லி, தோசையை காலியாக்கும் ரோட்டுக்கடை புதினா சட்னி- எப்படி செய்யணும் தெரியுமா?
பொதுவாக வீடுகளில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி தான் பிரதானமாக செய்வார்கள்.
அப்படி இருக்கும் பொழுது தினமும் ஒரே சுவையில் சட்னி செய்தால் சலித்து போய் விடும். இதனால் சிலருக்கு இட்லி, தோசை என்றாலே சாப்பிடுவதற்கு மனம் வராது.
இதனை சமாளிக்க வேண்டும் என்றால் வழக்கமாக செய்யும் சட்னியில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
அப்படியாயின் ரோட்டுக்கடை ஸ்டைலில் புதினா சட்னி எப்படி செய்து அசத்தலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ரோட்டுக்கடை புதினா சட்னி
தேவையான பொருட்கள்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* புதினா - 1 கட்டு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 3 பல்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
.* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய், புதினா, மஞ்சள் போட்டு நன்றாக வதங்க விட்டு எடுக்கவும்.
அதே வாணலியில், தக்காளி, புளி மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதங்க விட்டு இறக்கவும். இவை இரண்டும் குளிர்ந்த பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வறுத்த வரமிளகாய், பூண்டு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
தொடர்ந்து வாணலியை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் பூண்டு பற்களை நன்கு தட்டி அப்படியே தோலோடு போட்டு நன்கு வதக்க வேண்டும்.
வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையும் சேர்க்கலாம். கடைசியாக அரைத்த சட்னியை தாளிப்புடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைத்து, அடுப்பு அணைந்து பின்னர் இறக்கினால் சுவையான ரோட்டுக்கடை புதினா சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |