ரோஜா சீரியல் வில்லி வீட்டில் விசேஷம்! கர்ப்பமான பிரபல இலங்கை தமிழ் நடிகை- குவியும் வாழ்த்துக்கள்
ரோஜா சீரியலில் வில்லியாக கலக்கி வரும் ஷாமிலி சுகுமார் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி அவரது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டாப் ரேட்டிங்கில் இருக்கிறது ரோஜா, இந்த சீரியல் வில்லியாக கலக்கி கொண்டிருப்பவர் ஷாமிலி சுகுமார்.
நெகடிவ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தும் ஷாமிலி, இலங்கையை பூர்வீகமாக கொண்டவர், சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் சின்னத்திரைக்குள் நுழைந்து அசத்தி வருகிறார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் கூட நடித்துள்ள ஷாமிலிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கணவருக்கு சர்ப்ரைஸாக கூறியுள்ளார். கடைக்கு சென்று கிஃப்ட் வாங்கி வந்து அதில் பேப்பரில் எழுதி வைத்து சர்ப்ரைஸ் செய்து அசத்தியுள்ளார்.
அதுவும் அன்னையர் தினத்தில் ஷாமிலி பிரக்னன்ஸி பற்றி கூறியது கணவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷாமிலி.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.