கேப்டன்சி சர்ச்சைகள்... முதன் முறையாக விராட் கோலியை பற்றி பேசிய ரோகித் சர்மா!
இந்திய அணியில் விராட்கோலி ஒரு நாள் போட்டி கேப்டன்சியில் இருந்து விலக்கியுள்ள சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. டெஸ்ட் அணிக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாகவும், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிக்கு ரோகித் சர்மாவையும் பிசிசிஐ நிர்ணயித்து இருக்கிறது.
இந்நிலையில், இந்த கேப்டன்சி சர்ச்சைக்கு பல வீரர்கள் பதிலளித்து வந்தாலும், சம்பந்தப்பட்ட விராட் கோலி இதுவரை எந்தவித பதிலையும் கொடுக்கவில்லை.
இதனிடையே தற்போது இதுகுறித்து ரோகித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “இந்திய அணிக்காக நாம் கிரிக்கெட் விளையாடும் போது, அதிகப்படியான அழுத்தங்கள் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.
ஆனால், ரசிகர்களிடம் இருந்து விமர்சனங்கள் நல்லபடியாகவும் வரலாம் அல்லது மோசமாகவும் வரலாம். என்னை பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் வீரர் தனது முழு கவனத்தையும் ஆட்டத்தின் மீது தான் செலுத்த வேண்டும்.
மேலும், ஆட்டத்தில் கவனத்தை செலுத்தவதை விடுத்து மக்கள் கூறும் கருத்துக்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவற்றை எப்போதுமே நிறுத்த முடியாது.
இதை நான் ஏற்கனவே பல முறை கூறியுள்ளேன். தற்போது உள்ள சர்ச்சைகளுக்கும் இதையே தான் சொல்ல விரும்புகிறேன். இந்திய அணி வீரர்களுக்கு இதைதான் சொல்ல விரும்புகிறேன். பெரிய தொடர்கள் விளையாடும் போது பலவிதமான விமர்சனங்கள் முன் வைப்பார்கள்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை பற்றி தான் நினைக்க வேண்டும் என ரோகித் சர்மா” தெரிவித்து இருக்கிறார்.
மேலும் விராட் கோலியை பற்றி தெரிவிக்கையில், எப்போதுமே அணியை முன்னோக்கி வழிநடத்து செல்வார் விராட் கோலி. கடந்த ஐந்து ஆண்டுகளாக விராட் கோலி கேப்டனாக இருந்த காலக்கட்டம் முழுவதிலும் அவர் தான் அணியை முன்னின்று வழி நடத்திச் சென்றுள்ளார்.
அனைத்துப் போட்டிகளையும் வென்று விட வேண்டும் என்கிற முனைப்பும் முயற்சியும் எப்போதும் அவரிடத்தில் இருந்தது. அது தான் அவர் அணிக்கு எப்போதும் கொடுக்கும் செய்தியாக இருந்தது.
அவருக்கு கீழ் விளையாடியது எப்போதும் மறக்க முடியாத அனுபவமாகும். நான் அவரோடு இணைந்து பல காலமாக கிரிக்கெட் விளையாடி வருகின்றேன்.
நான் அவரோடு இணைந்து பயணித்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்தேன். தொடர்ந்து அனுபிவிப்பேன் என கூறி இருக்கிறார்.