"will you marry me..?" ரசிகருக்கு ப்ரபோஸ் செய்த ரோஹித் சர்மா... வைரலாகும் வீடியோ
"will you marry me..?" என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா நகைச்சுவையாக ஆண் ரசிகருக்கு ப்ரபோஸ் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆண் ரசிகருக்கு ப்ரபோஸ் செய்த ரோஹித் சர்மா
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தன் அணியினருடன் விமான நிலையத்திலிருந்து சென்றுக்கொண்டிருக்கும்போது ஒரு ஆண் ரசிகர் தன் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, வந்துக்கொண்டிருந்த ரோகித் சர்மா, அந்த ஆண் ரசிகருக்கு பூ கொடுத்து ‘Will you marry me..?’என்று சிரித்துக் கொண்டு நகைச்சுவையாக கூறிவிட்டு சென்றார். அப்போது அந்த ஆண் ரசிகர்கள் புன்னகைத்து சிரித்துக் கொண்டு அவரை பார்த்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Rohit Sharma is an amazing character - what a guy! pic.twitter.com/YZzPmAKGpk
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 19, 2023