ஸ்பெயின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பார்வையற்றோருக்கு உதவும் ரோபா நாய்கள்
பொதுவாகவே பார்வையற்றவர்கள் பாதையை கடப்பதற்கு பெரும் சிரமப்படுவார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகவே ஸ்பெயின் ஆய்வாளர்கள் ரோபோ ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர்.
ரோபா நாய்
கண்பார்வை அற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ''ரோபோ நாய் நாயை'' ஸ்பெயின் ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
இதனை ஜெரார்டோ போர்ட்டிலா என்பவர்தான் உருவாக்கியுள்ளார்.
"டெஃபி" என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாய், எதிரே வரும் வாகனங்கள், மனிதர்களை தனித்தனியாக அடையாளம் காண்கிறது.
இந்த ரோபோ கூகுள் மேப்பை முதன்மையாக கொண்டு இயங்குவதால் மருத்துவமனைகள் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை அனைத்தையும் சரியாக அடையாளம் காணும்.
அதேபோல கரடு முரடான பாதையிலும் இது சரியாக செல்லும். எனவே இதனை பயன்படுத்துபவர்கள் அச்சப்பட தேவையில்லை. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற நாய்களை விட இது விலை மலிவானதுதான் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
