கூகுள் மேப்பில் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்.. உற்சாகத்தில் பயனாளர்கள்
ஒரு ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் போதும், உலகத்தையே நுனி விரலில் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில், இன்றைய டிஜிட்டல் உலகில் கூகுள் மேப் அதை சுலபமாகி விட்டது. எங்காவது புதிய இடங்களுக்கு செல்வதாக இருந்தால் கூகுள் மேப்பில் தேடினால் போதும். போவதற்கு எவ்வளவு நேரமாகும்? எந்த வழியாக செல்லலாம்? எத்தனை கிலோமீட்டர்? என அனைத்து விவரங்களையும் கொடுத்து விடும்.
தற்போது, கூகுள் மேப்பில் புதிய அம்சத்தை விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது கூகுள். அந்த புதிய அம்சத்தின் மூலம் விடுபட்ட சாலைகளை மேப்பில் சேர்க்கவும், சாலையின் பெயர்களை மாற்றவும், புதிய மேப்புகளை வரையவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை, வரும் மாதம் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த புதிய அம்சம் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
