உடல் மெலிந்த நிலையில் சொந்தங்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய பிரபலம்! வைரல் வீடியோ காட்சி
ரோபோ சங்கரின் மனைவிக்கு “அம்மா” என குறிப்பிட்ட இளைஞரொருவர் அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வீடியோ காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் தான் ரோபோ சங்கர்.
இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பிற்கும் பேச்சு திறமைக்கும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரோபோ சங்கர் அவர்கள் சமிபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடல் மெலிந்த நிலையில் தான் காணப்படுகிறார்.
இந்த நிலைமையை குறித்து தேடி பார்க்கும் போது இவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
வைரலாகும் காட்சி
இதனை தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் உலக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் அவர்களின் தாய்மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
அந்த வகையில் ரோபோ சங்கரின் மனைவிக்கு இளைஞரொருவர் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், குறித்த இளைஞர் யாரென்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.