தன் தாய்க்கு ‘அன்னையர் தின வாழ்த்துக்கள்’ கூறிய விமானப் பணிப்பெண் - நெகிழ்ச்சி வீடியோ
தன் தாய்க்கு ‘அன்னையர் தின வாழ்த்துக்கள்’ கூறிய விமானப் பணிப்பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நேற்று உலகம் முழுவதும் ‘அன்னையர் தினம்’ கொண்டாடப்பட்டது. பலர் தங்களுடைய அன்னைக்கு அன்னையர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இன்னும் சிலர் டுவிட்டர், இன்ஸ்டா, பேக் புக் போன்ற சமூகவலைத்தளங்களில் தங்களுடைய அன்னையரின் புகைப்படம் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விமானப் பெண்ணின் அன்னையர் வாழ்த்துக்கள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
வானத்தில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தில், விமானப் பணிப்பெண் நபிரா சம்ஷி மைக்கில் பேசத் தொடங்கினார். அப்போது, விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் தன்னுடைய தாயை சம்ஷி அறிமுகப்படுத்தினார்.
என் தாயை இந்த சீருடையில் பார்ப்பது இதுவே முதல்முறை. 6 வருடங்களாக என் அம்மா இந்த கேபின் க்ரூவாக பணியாற்றி வருகிறார். இன்று என் அம்மாவை நான் பெருமைத்துவேன் என்று நம்புகிறேன். ஆகாயத்தில் பறக்கும் போதும், தரையில் இருக்கும் போதும், எனக்கு பின்பலமாக இருக்கும் என் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பேசிக்கொண்டிருக்கையில், சம்ஷிவின் தாயார் ஆனந்த கண்ணீர் வடித்தார். ஆனந்தத்தில் தன் மகளை அவர் கட்டியணைத்து முத்தமிட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்சன்கள் நெகிழ்ச்சி அடைந்து அப்பெண்ணுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆகாயத்தில் பறக்கும் போதும் தரையில் இருக்கும் போதும் எனக்கு பின்பலமாக இருக்கும் எனது அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.
— patrikai.com (@Patrikaidotcom) May 15, 2023
விமானப் பணிப்பெண்ணின் அசத்தல் அறிவிப்பு #happymothersday2023 #HappyMothersDay #airhostess pic.twitter.com/jcKSP15Wbr