பத்து நிமிஷத்துல இறந்துருவேன்னு சொன்னாங்க!.. குடும்பத்தோடு கண்ணீர் விட்ட பிரபலம்- இறுதி நாட்களின் உருக்கம்
”பத்து நிமிடங்களில் நான் இறந்து விடுவேன் என என்னுடன் இருந்தவர்கள் கூறினார்கள்.” என நடிகர் ரோபோ சங்கர் மேடையில் உருக்கமாக பேசியுள்ளார்.
ரோபோ சங்கர்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து கலக்கி வெள்ளித்திரையில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுனும் நடித்து விட்டார்.
நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நேரத்தில் உடல் நிலைக் கோளாறுவால் நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.
இருந்த போதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் வருகிறார்.
இறந்து விடுவேன்...
இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் 6 மாதங்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.
அப்போது பார்க்க வந்தவர்கள் ரோபோ சங்கர் இன்னும் கொஞ்சம் நாளில் இறந்து விடுவார் ” என கூறினார்கள்.
அத்துடன் சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அவர் இறந்து விடுவார் என அதிகமாக வைரலாகி வந்தன.
இதனை பார்த்த நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் கவலை அடைந்து அழுது புலம்பியுள்ளனர்.
இந்த விடயங்களை நடிகர் ரோபோ சங்கர் திரைப்பட விழாவில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |