மஞ்சள் காமாலை நோயை விரட்டியடிக்கும் கீழாநெல்லி ஜீஸ்.. தினமும் குடிக்கலாமா?
பொதுவாக தற்போது அநேகமானவர்களிடம் மஞ்சள் காமாலை தொற்று இனங்காணப்படுகின்றது.
இந்த நோயை ஆரம்பத்தில் சரியாக இனங்காணல் அல்லது கண்டுக் கொள்ளாமல் இருந்தால் உயிரிழப்பு தவிர்க்கமுடியதாகிவிடும்.
ஆரம்ப காலங்களில் அதிகமான எடை இழப்பு ஏற்படும்.
இதனை தொடர்ந்து நம்முடைய உடல் மஞ்சளாக மாறும் என பல அறிகுறிகள் கூறினாலும் இது போன்ற அறிகுறிகளை காட்டாமலும் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் மஞ்சள் காமாலை நோய் குறித்து சில விடயங்களை தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகள்
1. காய்ச்சல்
2. குமட்டல்
3. அசதி
4. பசியில்லாதிருத்தல்
5. சிறு நீர் மஞ்சளாக வருதல்
6. மலச்சிக்கல்
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்
Image - Insider
1. மூன்று வேளை உணவுகள் எடுத்து கொள்ளும் போது கசப்பு தன்மை நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். இது உடலுக்கு இது போன்ற நோய்களை வர விடாமல் தடுத்து பாதுகாக்கின்றது.
2. மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடி மருந்து வில்லைகளை பெற்று மலத்தை தேக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.
3. இரவு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இதனால் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
4. உணவுகளில் அதிகமான எண்ணெய்களை சேர்த்து கொள்ளக்கூடாது. ஏனெனின் எண்ணெய்கள் தேங்கி நின்று தேவையற்ற நோய்களை ஏற்படுத்தும்.
மஞ்சள் காமாலையை குணமாக்க ஒரு டிப்ஸ்
தேவையான பொருட்கள்
- கீழாநெல்லி இலை – 25 கிராம்
- முற்றிய வேப்பிலை – 25 கிராம்
- மஞ்சள் தூள் – 10 கிராம்
செய்முறை
மேற்குறிப்பிட்ட மூன்று பொருட்களை தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதனை வடிக்கட்டி வைத்து விட்டு சாப்பிடுவதற்கு சரியாக 30 நிமிடங்களுக்கு முன்னர் இந்த சாற்றை அருந்த வேண்டும்.
இவ்வாறு அருந்துவதால் மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கலாம்.
தினமும் குடிக்கலாமா? என கேட்டால் கூடாது தேவை இருந்தால் குடிக்கலாம். அத்தியாவசியமாக குடிப்பதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |