காதல் கணவரை பிரிந்துவிட்டாரா? சீரியல் நடிகை ரக்ஷிதா.. காரணம் என்ன? கண்ணீர் வடிக்கும் குடும்பம்;
சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையான நடிகை ரக்ஷிதா, பிரிவோம் சந்திப்போம் சீரியல் நாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பெங்களூருவை சேர்ந்த ரக்ஷிதா சீரியலில் நடிப்பதற்கு முன்பே கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவர் சேர்ந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்தனர்.
சீரியல் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்ற இவர், பிஸியாகவே மாறிவிட்டார். ஆனால், வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் கணவர் தினேஷிற்கும், ரக்ஷதாவுக்கும் இடையே சண்டை வந்துள்ளது.
மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிக்கிறார் என்றும் தனக்கு சீரியல் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றும் தினேஷ் மன விருக்தி அடைந்துள்ளார்.
இதனால், பிரச்சினை பெரியதாகிவிடும் என தனித்தனியாக வீடு எடுத்து இருவரும் வசித்து வருகின்றனர். மேலும், இரு வீட்டாரும் சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால், இவர்களின் பிரச்சினை ஊதி பெரியதாக்கி விடுகிறார்களாம் நண்பர்கள். தற்போது இருவரும் இதுகுறித்து என்ன செய்யப்போகிறார்கள் என இனி தான் தெரிய வரும்.