ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!
பொதுவாக ரோட்டு கடைகளில் கிடைக்கும் காளான் மசாலாவை அனவருக்குமே பிடிக்கும்.
இது சுகாதார முறையை பின்பற்றி செய்யப்படாத காரணத்தினால் அதனை சாப்பிட்ட பின்னர் பலருக்கும் வயிற்று வலி நெஞ்செரிச்சல், செறிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
இந்த பிரச்சினையை தவிர்க்க காளான் மசாலாவை அட்டசாசமான சுவையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் -250 கிராம்
பெரிய வெங்காயம் -2
பொடியாக நறுக்கிய கோஸ்- 2 கப்
கான்பிளவர் மாவு- 1/4 கப்
சோயா சாஸ் 3 தே.கரண்டி
தக்காளி சாஸ் - தேவையான அளவு
ரெட் சில்லி சாஸ்- தேவையான அளவு
எண்ணெய்- தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள்
இஞ்சி - பூண்டு விழுது
கரம் மாசாலா
மிளகாய் தூள்
செய்முறை
முதலில் கோஸ் மற்றும் காளானை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் 2 கொத்து கருவேப்பிலையையும் நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 3 தே.கரண்டி கான்பிளவர் மாவையும் கலந்து ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும்.
பின்பு 1 ½ மேசைக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அந்த கலவையை நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். (இடையிடையே தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்)
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி,இந்த கலவையை பொறித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி - பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் வதக்கி, அதனுடன் கருவேப்பிலை மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்பு அதனுடன் மிளகு பொடி மற்றும் தெவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு அதனுடன் இரண்டு தேக்கரண்டியளவு தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் ரெட் சில்லி சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
தண்ணீர் குறையத் ஆரம்பிக்கும் போது வறுத்த கோஸ் மஷ்ரூமை அதனுடன் சேர்த்து 15 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியில் இதற்கு மேலாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது கார்ன் சிப்ஸ் தூவினால் அவ்வளவு தான் ஆரோக்கியமான முறையில் அசத்தல் சுவையில் ரோட்டு கடை களான் மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |