CM விஜய்யை சந்தித்த RJ பாலாஜி! அனைத்தையும் தொடங்கி வைத்தவர் என நெகிழ்ச்சி
கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது மனைவியுடன் இணைந்து முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்ப பட வெற்றி
RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய கருப்பு திரைப்படம் வெற்றிநடை போட்டு வருவதுடன் வசூல் வெறியாட்டம் ஆடியுள்ளது.300 கோடியை கடந்தும் இன்னும் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் நடிகர் சூர்யா சொகுசு காரை பரிசாக வழங்கியிருந்தார்.

விஜய்யை சந்தித்த RJ பாலாஜி
இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யை RJ பாலாஜி சந்தித்து நேரில் சந்தித்து பேசியுள்ளார். குறித்த சந்திப்பு பற்றி RJ பாலாஜி குறிப்பிடுகையில்,
"என்னுடைய 'கருப்பு' படத்திற்கான அனைத்தையும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் ஒரு சந்திப்பு!!! வாவ்...! இப்போது அவரை தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக சந்திப்பது முற்றிலும் கற்பனைக்கு எட்டாத ஒரு விஷயமாக, பிரம்மிப்பாக உணர்கிறேன்.

மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள்
அதே அன்பு, அதே அரவணைப்பு, அதே கனிவு மற்றும் அமைதி. எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி என் அன்பிற்குரிய விஜய் சார்" என நெகிழ்ச்சியுடன் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
— RJ Balaji (@RJ_Balaji) June 2, 2026
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿 pic.twitter.com/sd6qqdNUGH
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |