மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள்
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ சுந்தர், தனது குடும்பத்தினருடன், தனது மகள் அவந்திகாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
குஷ்பு மகள் திருமணம்
குஷ்பூ சுந்தர், அவரது கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா மற்றும் ஆனந்திதா, மற்றும் வருங்கால மருமகன் ஸ்ரவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.

இது குறித்து நடிகை குஷ்பு தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிடுகையில், "எனது அன்பு சகோதரரும், நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான திரு @actorvijay அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகளின் திருமணத்திற்கு திரு ஸ்ரவன் ஸ்ரீனிவாசனுக்கு அழைப்பிதழ் வழங்கியதால், இது எங்கள் குடும்பத்திற்கு உண்மையிலேயே ஒரு சிறப்புமிக்க மற்றும் மறக்க முடியாத நாளாகும்."

"அவரைக் காணும்போதெல்லாம் எங்கள் இதயங்கள் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரம்புகின்றன. குழந்தைகள் மிகவும் பரவசமடைந்தனர், அவரை விட்டு தங்கள் கண்களை எடுக்க முடியவில்லை." " அவரது பணிச்சுமை மிகுந்த வேலைகளுக்கு மத்தியிலும், நாங்கள் எப்போதும் போற்றி வந்த அதே அரவணைப்பு, பாசம் மற்றும் அழகான புன்னகையுடன் அவர் எங்களை வரவேற்றார்.

என் சகோதரனே, உனது பொன்னான நேரம், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அது மகத்தானது. உன்னை எப்போதும் நேசிக்கிறேன்,” என்று குஷ்பூ சுந்தர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு புகைப்படங்களையும் பவிட்டுள்ளார். குறித்த புகைபடங்கள் இணையத்தில் வைராலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |