பிக் பாஸில் கண்ணீருடன் வெளியேறிய ரியாவின் முதல் வீடியோ! இதுக்கெல்லாம் காரணம் சௌந்தர்யாவா?
தற்போது நேற்றுடன் வெளியேறிய ரியா இணையத்தில் பதிவு செய்த முதல் வீடியோவில் பேசிய விடயங்கள் மக்களை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் ரியா
பிக் பாஸ் நிகாழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி முதல் வாரத்தில் இருந்து சுவாரஸ்யம் இல்லாமல் வந்த நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இதுவரை நான்கு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகிச் சென்றுள்ள நிலையில் தற்போது ஐந்தாவது போட்டியாளராக ரியா வெளியேறி சென்றுள்ளார். இவர் போட்டியில் இருந்து வெளியேறி சென்றதற்கான காரணம் என்வென்றே இவருக்கு தெரியாமல் அழுகையுடன் வெளியேறி சென்றார்.
இது பார்ப்பதற்கு ரசிகர்கள் மனதிலும் ஒரு கவலையை உண்டாக்கியது. ஆனால் 13 நோமினேஷனில் இருந்தார்கள். அவர்களில் மிகவும் குறைவான ஓட்டுக்களை மஞ்சரியும் ரியாவுமே பெற்றிருந்தார்கள். ஆனால் மஞ்சரியை விட ரியா ஓட்டுக்களை குறைவாக பெற்றிருந்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் போது அவர் வெளியே வந்ததும் முதலாவதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “அதில் அவர் பேசியது விஜய் சேதுபதி என் மனதில் இருந்ததை எல்லாம் பேசினார். எனக்கு நாம் நினைப்பதை அவர் அப்படியே கேள்வியாக கேட்கிறார் என தோனுகிறது.
ஐந்து பேர் தான் பெண்கள் அணியில் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள் என கூறியபோது அவர்களிடம் விஜய் சேதுபதி ஏன் பெண்கள் அணி என்றால் எல்லோரும் தானே முடிவு எடுக்க வேண்டும் என கேள்வி கேட்டபோது இல்லை அவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என அந்த ஐந்து பேர் கூறினார்கள்.
அதற்கு சொளந்தர்யாவும் ஆமா சேர் என கூறினார். நான் நினைக்கிறேன் செளந்தர்யாவிற்கு போசனும் எங்கு பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என தெரியாமல் அங்கு ஏதோ ஒன்று பண்ண வேண்டும் என நினைக்கிறார்களோ! என எனக்கு தோன்றுகிறது.
இப்படி அவர்கள் கூறுவதற்கு சௌந்தர்யாவும் ஆமாம் என தலையாட்டினால் மற்றவர்கள் நினைப்பதை அங்கு கூற முடியாமல் போகிறது. சரி பார்க்கலாம் இந்த பிக் பாஸில் என்ன நடக்கிறது என்று என“ தனது முதலாவது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |